ரொனால்டோ காதலி வெளியிட்ட அழகான வீடியோ! மெஸ்ஸி மனைவி போட்ட ஒரு கமெண்ட்
ரொனால்டோ காதலி ஜார்ஜினா வெளியிட்ட வீடியோவுக்கு மெஸ்ஸி மனைவி ஆண்டோனிலா ரியாட் செய்துள்ளார்.
ஜார்ஜினா பதிவு
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவுடன் அவரின் காதலி ஜார்ஜினா மற்றும் 5 குழந்தைகளும் சவுதிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஜார்ஜினா தனது 5 வயது மகன் ஜாலியாக குளிப்பதையும், அதை அவரின் மற்றொரு குழந்தை பார்த்து சிரிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
ரியாக்ட் செய்த மெஸ்ஸி மனைவி
இதற்கு ரொனால்டோ காதல் இதயத்தை காட்டும் இமோஜியை பதிவிட்டு ரியாக்ட் செய்தார். மறுபுறம் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் மனைவி ஆண்டோனிலா இதய வடிவிலான கண் இமோஜியை பதிவு செய்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
அதாவது ஆண்டோனிலா, ரொனால்டோ - ஜார்ஜினாவின் குழந்தைகளின் சுட்டித்தன விளையாட்டை ரசித்து பார்த்து மகிழ்ந்தார் என்பதற்கான சமிக்ஞை அது..!
Instagram