அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை: சூசகமாக கூறிய மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனை மெஸ்ஸி தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி
லீக்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து, மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் கடைசி உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டியில் விளையாட உள்ளார்.
அர்ஜென்டினா - வெனிசுலா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி குறித்து மெஸ்ஸி கூறுகையில்,
"வெனிசுலாக்குப் பிறகு நட்புப் போட்டிகள் இருக்குமா அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டியாக இருக்கும், ஏனெனில் இது கடைசி தகுதிச்சுற்றுப் போட்டி ஆகும்.
எனவே என் மனைவி, என் குழந்தைகள், என் பெற்றோர், என் உடன்பிறந்தவர்கள் என என் குடும்பத்தினர் என்னுடன் இருப்பார்கள். நாங்கள் அதை அப்படியே வாழப் போகிறோம். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.
சூசகமாக
இதன்மூலம் மெஸ்ஸி அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு பிறகு தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸியின் கடைசி உள்ளூர் போட்டி என்பதால், அர்ஜென்டினா கால்பந்து சங்கமானது டிக்கெட் விலையை உயர்த்த முயற்சிப்பதாகவும், குறைந்தபட்ச விலையை 100 அமெரிக்க டொலருக்கும், அதிகபட்ச டிக்கெட் விலையை 500 அமெரிக்க டொலருக்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2030ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றுகள் 2027யில் தொடங்கும். அப்போது மெஸ்ஸியின் வயது 40 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |