உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? லயோனல் மெஸ்சியின் ஆச்சரிய பதில்
35 வயதாகும் அர்ஜென்டினா அணிக்காக 164 போட்டிகளில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார்
அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களான போலோ டயபல, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் காயமடைந்துள்ளனர்
அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்சி, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளுக்கே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் நவம்பர் மாதம் கத்தாரில் தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்லும் அணி எது என்பது குறித்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி கருத்து தெரிவித்துள்ளார்.
தனது விருப்ப அணிகளாக பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளதாக மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தமுறை இரு சிறந்த அணிகளான பிரேசில் மற்றும் பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார்.
Alejandro Garcia/EPA, via Shutterstock
மேலும் மெஸ்சி கூறுகையில், 'இந்த உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியை தெரிவு செய்ய வேண்டும் என்றால், பிரேசில் மற்றும் பிரான்ஸை தான் நான் கூறுவேன். பிரான்சிற்கும், அதன் பயிற்சியாளருக்கும் தெளிவான எண்ணம் உள்ளது. பிரேசிலை பொறுத்தவரையும் அதே தான்' என தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி தனது அணி குறித்து கூறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கோபா அமெரிக்கா தொடரில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
NELSON ALMEIDA / AFP / GETTY IMAGES