கால்பந்து உலகக் கோப்பையை கட்டிபிடித்து தூங்கி அதனுடனே எழுந்த மெஸ்ஸி! வைரல் புகைப்படங்கள்
கால்பந்து உலகக்கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி வெற்றி கோப்பையை படுக்கைக்கு அருகிலேயே வைத்து தூங்கிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
லியோனல் மெஸ்ஸியின் கனவு
ஞாயிறு அன்று நடைபெற்ற கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதன்மூலம் அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவு முதல்முறையாக நிஜமானது.
கோப்பையுடன் தூக்கம்
இந்த நிலையில் மெஸ்ஸி படை அர்ஜென்டினாவை சென்றடைந்தனர். இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற மெஸ்ஸி படுக்கையில் தனது அருகில் உலகக்கோப்பையை வைத்தபடி கட்டிபிடித்து தூங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
குட் மார்னிங் என பதிவிட்டு, கோப்பையை கட்டிபிடித்து தூங்குவதையும், அதை கையில் ஏந்தியபடியே படுக்கையில் சாய்ந்தபடி உட்கார்ந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.