அது வரையில் தொடர்வேனா தெரியாது... அடுத்த உலகக் கோப்பை குறித்து லியோனல் மெஸ்ஸி
கத்தார் உலகக் கோப்பையை வென்றும், தாம் இணைந்திருந்த பிரெஞ்சு கால்பந்து கிளப் உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என லியோனல் மெஸ்ஸி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்டர் மியாமி அணியில்
Paris St Germain அணியில் இருந்து விலகி தற்போது அமெரிக்காவில் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார் அர்ஜென்டினா கால்பந்து அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி.
காயம் காரணமாக இன்டர் மியாமி ஆட்டம் ஒன்றில் இருந்து பாதியில் வெளியேறிய மெஸ்ஸி, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதிலேயே PSG அணியுடனான அவரது நிலை, அடுத்த உலக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புண்டா உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, முதல் நல்ல உடல் தகுதியுடன் Copa America கிண்ணத்திற்கு தாம் தயாராக வேண்டும் என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அடுத்த ஃபிஃபா உலகக் கோப்பை குறித்து தாம் யோசிக்கவே இல்லை எனவும், தற்போதைய உடல் நிலை ஒத்துழைக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |