உலக கோப்பையுடன் மெஸ்ஸியின் உருவ சிலை திறப்பு: இதற்கு மெஸ்ஸி கூறியது இது தான்!
பராகுவேயிலுள்ள CONMEBOL அருங்காட்சியகத்தில் டியாகோ மரடோனா, பீலே ஆகியோரின் சிலைக்கு அருகே லியோனல் மெஸ்ஸி(lionel messi) சிலை திறக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸியின் சிலை திறப்பு
பராகுவேயின் லுக்கில் உள்ள CONMEBOL தலைமையகத்தில் கடந்த திங்களன்று நடைபெற்ற திறப்பு விழாவில் உலக கோப்பையின் பிரதியை வைத்திருக்கும் மெஸ்ஸியின் உருவ சிலை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அர்ஜெண்டினாவிற்கு உலக கோப்பையை(fifa world cup) பெற்றுத் தந்ததற்காக வரலாற்றில் இதனை பதிவு செய்யும் வகையில் இந்த உருவ சிலை திறக்கப்பட்டுள்ளது.
@REUTERS
35 வயதான மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவிற்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளார்.
கையில் உலக கோப்பையுடன் இவரது உருவ சிலை அர்ஜெண்டினாவிற்கு உலக கோப்பையை வாங்கி தந்த வீரர்களான பீலே மற்றும் டியாகோ மரடோனாவின் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய சாதனை
”கால்பந்து வீரனாக என்னுடைய பயணம் நீண்ட பாதையைக் கொண்டது, மேலும் அதில் நிறைய தோல்விகளை சந்தித்தேன். ஆனால் என் இலக்கு எப்போதும் வெற்றியை நோக்கியே சிந்தித்தது.”
@REUTERS
“பெரிய ஜாம்பவான்களுக்கு அருகே உருவ சிலை அமைப்பதை பெருமையாக கருதுகிறேன். உங்கள் கனவுக்காக போராடினால் நீங்கள் நினைத்ததெல்லாம் சாத்தியப்படும். விளையாட்டை நேசிப்பது மிகவும் அழகான விடயம்” என மெஸ்ஸி கூறியுள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு, பனாமாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தனது 800வது career goal அடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமையன்று தேசிய அணியின் பயிற்சி நிலையத்தின் பெயரை மெஸ்ஸியின் பெயராக மாற்றப்பட்டது.
மெஸ்ஸி தனது நாட்டிற்காக 99 கோல்களை அடித்துள்ளார். மேலும் செவ்வாய் கிழமை குராக்கோவிற்கு எதிரான நட்பு ஆட்டத்தில் கோல் அடித்தால் அவர் 100 சர்வதேச கோல்களை அடித்த முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற பெருமையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.