மெஸ்ஸியின் கழுத்துக்கு வந்த மின் கம்பி., வரவேற்பு பேரணியில் விபத்திலிருந்து தப்பிய வீரர்கள்
அர்ஜென்டினாவில் மெஸ்ஸி மற்றும் சில வீரர்கள் நொடிப்பொழுதில் விபத்திலிருந்து தப்பியுள்ளனர்.
உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக அர்ஜென்டினா தெருக்களில் வரவேற்பு பேரணி நடைபெற்றது. அப்போது, பேருந்தின் உச்சியில் அமர்ந்திருந்த மெஸ்ஸி மற்றும் நான்கு வீரர்கள் நொடிப்பொழுதில் விபத்தில் இருந் தப்பிய வீடியோ காட்சி இனையத்தில் வெளியாகியுள்ளது.
லட்சக்கணக்கான ரசிகர்களால் வரவேற்கப்பட்டனர்
இறுதிப் போட்டியில் பிரான்சை தோற்கடித்து கத்தாரில் மூன்றாவது FIFA உலகக் கோப்பை பட்டத்தை வென்ற பிறகு, பியூனஸ் அயர்ஸ் சென்றடைந்த அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு தாயகம் திரும்பிய பெரும் வரவேற்பு கிடைத்தது.
GettyImages
உலகக் கோப்பை கோப்பையுடன் பேருந்தின் உச்சியில் ஏறிய லியோனல் மெஸ்ஸியும் அவரது ஆட்களும் லட்சக்கணக்கான ரசிகர்களால் வரவேற்கப்பட்டனர்.
நொடிப்பொழுதில் விபத்திலிருந்து தப்பினர்
ஆனால், ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாக, ரோட்ரிகோ டி பால், நிக்கோலஸ் ஓட்டமெண்டி, லியோனல் மெஸ்ஸி, லியாண்ட்ரோ பரேடெஸ் மற்றும் ஏஞ்சல் டி மரியா ஆகிய ஐந்து பேரும் பேருந்தின் உச்சியில் அமர்ந்து பேரணியில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களுது கழுத்துக்கு நேராக வந்த தடிமனான மின் கம்பி ஒன்று அவர்களை மோதவிருந்தது.
ஆனால், அந்தக் கம்பியை அவர்கள் பார்த்துவிட்டதால், நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஐந்து பெரும் குனிந்துவிட்டதால், ஒரு பயங்கரமான விபத்தில் இருந்து அவர்கள் தப்பினர்.
Argentina get their heroes home but nearly clothesline them off the bus.pic.twitter.com/hemkogABq2
— Football España (@footballespana_) December 20, 2022
இருப்பினும், இடதுபுறம் முதல் ஆளாக அமர்ந்திருந்த வீரரின் தலையில் மின் கம்பி உரசிச்ச சென்றது, இதில் அவரது தொப்பி கீழே விழுந்தது.
குழுவின் நடுவில் அமர்ந்து உலகக் கோப்பையைப் பிடித்துக் கொண்டிருந்த மெஸ்ஸிக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
Reuters