மெஸ்ஸி அழுவார்! பிரான்ஸ் தான் ஜெயிக்கும்.. பிரித்தானிய ஆளுமை முகத்தில் பூசப்பட்ட கரி
கால்பந்து உலகக்கோப்பையை பிரான்ஸ் தான் ஜெயிக்கும் எனவும், மெஸ்ஸி அழுவார் எனவும் பிரித்தானிய தொலைக்காட்சி ஆளுமை கணித்தது பொய்த்து போயுள்ளது.
அர்ஜென்டினா வெற்றி
கத்தார் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வென்று அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் மெஸ்ஸி இடம்பெற்ற அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியால் ஜாம்பவான் மெஸ்ஸி மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்.
AFP/Getty Images
கணிப்பு பொய்யானது
இதனிடையில் பிரித்தானிய ஒளிபரப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை என பன்முகம் கொண்ட பியர்ஸ் மோர்கன் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றும். எம்பாப்பே இரண்டு முறை கோல் அடிப்பார். மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுவார் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரின் கணிப்பு முழுவதும் பொய்யாகி போனதோடு மெஸ்ஸி, பியர்ஸ் முகத்தில் கரியை பூசிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
PREDICTION: France will beat Argentina 3-1 to win the World Cup. Mbappe will score twice, Griezmann will be MoM and Messi will cry.
— Piers Morgan (@piersmorgan) December 18, 2022