பார்சிலோனா அணி நண்பர்களுக்கு மெஸ்ஸி அனுப்பிய கலங்க வைக்கும் கடைசி மெசேஜ்! வெளிப்படுத்திய பத்திரிகையாளர்
கால்பந்து ஜாம்பாவன் மெஸ்ஸி, PSG-யுடனான முதல் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு, பார்சிலோனாவில் தன்னுடன் விளையாடிய முன்னாள் சக அணி வீரர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை அர்ஜென்டின் பத்திரிகையாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயின் லா லிகாவில் சட்ட தடைகள் காரணமாக பார்சிலோனா கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறினார்.
இச்செய்தி லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.
இந்நிலையில், பார்சிலோனா நண்பர்களுக்கு மெஸ்ஸி வாட்ஸ் அப்பில் அனுப்பிய கடைசி மெசேஜை அர்ஜென்டினா பத்திரிகையாளர் Veronica Brunati வெளிப்படுத்தியுள்ளார்.
Veronica Brunati ட்விட்டரில் பதிவிட்டதின் படி, Gerard Pique, Cesc Fabregas உட்பட பார்சிலோனா அணி வீரர்களுடனான வாட்ஸ் அப் குழுவில் மெஸ்ஸி தனது கடைசி மெசேஜை அனுப்பியுள்ளார்.
அதில், நான் வெளியேற விரும்பவில்லை. இதற்கு மேல் நம்மால் எதுவும் செய்ய முடியாது, பணம் இல்லை.
Mirá si será culé #Messi que mantiene un grupo de whats app con sus compañeros de la Masía cat 87’ y les avisó a ellos por qué se iba de #Barça: “No me quiero ir. No se pudo hacer más, no hay dinero. El club está muy mal y no pueden renovarme”, me cuentan que les dijo. ?
— Veronica Brunati ? (@verobrunati) August 11, 2021
கிளப் மோசமான நிலையில் உள்ளது, அவர்களால் என்னை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்று மெஸ்ஸி மெசேஜ் அனுப்பியுள்ளார் என அர்ஜென்டினா பத்திரிகையாளர் Veronica Brunati தெரிவித்துள்ளார்.