ஆண்டின் கடும் வெப்பமான நாள்... அறிவித்த பிரித்தானிய வானிலை மையம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரித்தானியாவில் இதுவரை பதிவான இந்த ஆண்டின் வெப்பமான நாள் என்ற சாதனை இந்த வாரத்தில் இரண்டு முறை முறியடிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பதிவான வெப்பநிலையில் இது உச்சம்
பிரித்தானியாவில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான கடுமையான வெப்ப நாள் மே 21, ஞாயிற்றுக்கிழமை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
@PA
வேல்ஸ், போர்த்மாடோக் பகுதியில் வெயில் சுட்டெரித்துள்ள நிலையில், வெப்பநிலை 23.3C என பதிவாகியுள்ளது. 2023ல் இதுவரை பதிவான வெப்பநிலையில் இது உச்சம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் திங்கட்கிழமையும் இதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். லண்டனின் சில பகுதிகளில் வெப்பநிலை 22C என பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம் எனவும் வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கார்டிஃப் பகுதியில் வியாழக்கிழ்மை 23C வரையில் வெயில் சுட்டெரிக்கலாம் எனவும் கணித்துள்ளனர். இருப்பினும், ஸ்காட்லாந்தில் வசிப்பவர்களுக்கு, வெப்பநிலை சற்று குறைவாக இருக்கலாம் என்றே தெரிவித்துள்ளனர்.
@Shutterstock
மீண்டும் வெயில் சுட்டெரிக்கலாம்
மான்செஸ்டர் பகுதியில் நாளை 20C வெப்பம் பதிவாகலாம் எனவும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் முறையே 16C மற்றும் 17C என குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஞாயிறன்று மீண்டும் வெயில் சுட்டெரிக்கலாம் எனவும் வெப்பநிலை 20C என அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.