பிரித்தானியாவை மூடும் பனிப்புயல்: மெட் அலுவலகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும் பகுதிகளுக்கு பனிப்புயல் குறித்த எச்சரிக்கையை மெட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
நெருங்கி வரும் கோரெட்டி பனிப்புயல்
கோரெட்டி பனிப்புயல்(Goretti Strom) பிரித்தானியாவை நெருங்கி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மெட் அலுவலகம் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு ஆங்கிலியா, மிட்லாண்ட்ஸ், வடக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகள் மேலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரமான ஆம்பர் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மத்திய வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் மேலும் வடக்கில் உள்ள சில பகுதிகள் ஆகியவற்றுக்கு 30CM வரையிலான பனிப்பொழிவு இருக்கும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பனிப்புயல் பாதிப்புகள் ஏற்பட சாத்தியமான இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்திக்கலாம் என்றும், ரயில் மற்றும் விமானப் பயணிகள் பயண ரத்துக்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற பகுதியில் உள்ள சமூக குழுக்கள், மின்சார சேவை பாதிப்பு, தொலை தொடர்பு பாதிப்பு உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான பாதிப்பை எதிர்கொள்ளலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மெட் அலுவலகம் கார்ன்வால் பகுதிக்கு மற்றொரு ஆம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதில் 90mph வரையிலான பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பறக்கும் குப்பைகளால் காயங்கள் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |