நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உள்ளான 650 சிறார்கள்: பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

London
By Arbin Aug 08, 2022 01:34 PM GMT
Report

பிரித்தானியாவில் விதிகளை மீறி சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்திய விவகாரத்தில் பெருநகர காவல்துறை கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றது.

குறித்த பகீர் சம்பவத்தை இங்கிலாந்துக்கான குழந்தைகள் ஆணையர் வெளிப்படுத்தியுள்ளார். பெருநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 2018 மற்றும் 2020 க்கு இடையில் 10 முதல் 17 வயதுடைய 650 சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனை முன்னெடுத்துள்ளனர்.

15 வயது கறுப்பின சிறுமி ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள தனது பள்ளியில் ஆடைகளை அகற்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். குறித்த சிறுமி பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், சிறப்பு அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையிலேயே இதேப்போன்று 650 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உள்ளான 650 சிறார்கள்: பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம் | Met Police Strip Searched Young Children

@sputnik

நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரு குழந்தையின் உளவியல் பாதிப்பு தொடர்பில் எவரும் கருத்தில் கொள்வதில்லை எனவும், அந்த குழந்தைக்கு அது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் எனவும் சிறார்களுக்கான ஆணையர் Dame Rachel de Souza தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், அவசரச் சூழ்நிலைகளைத் தவிர, பொருத்தமான வயது வந்தோர் ஆஜராக வேண்டும் என்பது சட்டப்பூர்வ தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று வருட காலத்தில் 650 சிறார்கள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 58% சிறார்கள் கருப்பினத்தனவர்கள் எனவும் வெளியான தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, முதலில் ஏன் இவ்வளவு சிறார்களுக்கு நிர்வாண சோதனை முன்னெடுக்கப்படுகிறது என குழந்தைகள் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த சோதனையில் இலக்கானவர்களில் 5-ல் ஒருவருக்கு எந்த இடத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலும் தெரியவில்லை என்பது மர்மமாகவே உள்ளது என சிறார்களுக்கான ஆணையர் Dame Rachel de Souza தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US