Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய Imagine Me - இளைஞர்களைக் கவரும் சிறப்பு அம்சம்
மெட்டா AI, இந்தியாவில் ஜூலை 17, 2025 முதல் தனது புதிய “Imagine Me” எனும் தனிப்பயனாக்கப்பட்ட படம் உருவாக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Instagram, WhatsApp, மற்றும் Facebook Messenger ஆகிய மெட்டாவின் மெசேஜிங் செயலிகளில் இயங்கும் புதிய செயற்கை நுண்ணறிவு வசதியாகும்.
எப்படி பயன்படுத்துவது?
பயனர்கள் "@Meta AI" என்று குறிபிட்டு, தனிப்பட்ட அல்லது குழு உரையாடல்களில் “Imagine me as…” என தொடங்கி ஏதேனும் ஒரு கற்பனை கூறலாம். உதாரணமாக:
“Imagine me as a 90s gangster.”
“Imagine me as a cowboy, but on the moon.”
இந்த கற்பனைகளை அடிப்படையாக கொண்டு மெட்டா AI, பயனரின் உருவத்தை அந்தக் காட்சியில் காட்சிப்படுத்தும். இதற்காக பயனர்கள் முன்புறம், இடது மற்றும் வலது பக்கங்களில் எடுத்த 3 செல்ஃபி புகைப்படங்களை வழங்க வேண்டும்.
தனிப்பட்ட கட்டுப்பாடுகள்
பயனர்கள் உருவாக்கிய படங்களை எடிட் செய்யலாம், மீண்டும் உருவாக்கலாம் அல்லது நீக்கலாம். புகைப்படங்களை புதுப்பிக்கலாம், விருப்பங்களை மாற்றலாம் அல்லது இந்த வசதியை முடக்கவும் முடியும்.
மெட்டாவின் வெளிப்படைத்தன்மை கொள்கைக்கு ஏற்ப, "Imagined with AI" எனும் வாசகமும், மற்ற AI உருவாக்கிய படங்களுக்கு "AI info" என்ற குறியீடுகளும் சேர்க்கப்படும்.
இந்த புதிய வசதி, சமூக ஊடகங்களில் தனிப்பட்ட காட்சிகளை உருவாக்க விரும்பும் இளையர்குழுவினரிடையே பெரும் வரவேற்பைப் பெறக்கூடியதாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meta Imagine Me feature, Meta AI image generator, Imagine Me Meta India launch, Meta AI WhatsApp image tool, Personalized AI images Meta, Imagine me Meta Instagram, AI photo generator by Meta, Meta Imagine Me how to use, Meta AI chatbot image feature, Selfie-based image generator Meta