கனடாவின் பேஸ்புக் பயனாளர்களுக்கு பல மில்லியன் தொகையை இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ள மெற்றா
கனடாவின் நான்கு மாகாணங்களின் பேஸ்புக் பயனாளர்களுக்கு 51 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க மெற்றா நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய மக்களின் ஒப்புதலின்றி
கடந்த 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் கனேடிய மக்களின் ஒப்புதலின்றி, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி மெற்றா நிறுவனம் தங்களின் பேஸ்புக் சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் மெற்றா நிறுவனத்திற்கு எதிராக வெகுஜன வழக்கு முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது வழக்கை முடித்துக் கொள்ள கனேடிய பேஸ்புக் பயனாளர்களுக்கு 51 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க மெற்றா நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்த விவகாரம் நாட்டின் தனியுரிமைச் சட்டங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி மற்ற நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும் எச்சரிக்கை என்றே இந்த வழக்கில் பொதுமக்கள் சார்பில் பங்கேற்ற சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
4.3 மில்லியன் கனேடியர்களுக்கு
கடந்த 2019ல் மெற்றா நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டிஷ் கொலம்பிய பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இதே விவகாரத்தை குறிப்பிட்டு Saskatchewan, Manitoba மற்றும் Newfoundland & Labrador ஆகிய மாகாண மக்களும் முன்வந்தனர்.
நிறுவனம் ஒன்றின் தயாரிப்பை பேஸ்புக் பயனாளர் ஒருவர் விருப்பம் தெரிவித்தால், அந்த பயனாளரின் புகைப்படம் மற்றும் பெயரை அவரிடம் ஒப்புதல் பெறாமல் மெற்றாவின் பேஸ்புக் நிறுவனம் விளம்பரமாக பயன்படுத்தியது.
இது நாட்டின் தனியுரிமை சட்டத்தை மீறும் செயலாகும். தற்போது இந்த வழக்கை முடித்துக்கொள்ள மெற்றா நிறுவனம் 51 மில்லியன் இழப்பீடை வழங்க முன்வந்துள்ளது. இதனால் சுமார் 4.3 மில்லியன் கனேடியர்களுக்கு இந்த இழப்பீட்டு தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |