Meta-வில் மீண்டும் தொடரும் ஊழியர்கள் பணி நீக்கம்! பதற்றத்தில் ஊழியர்கள்
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பணி நீக்கம்
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிறுவனமான மெட்டா ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய பணி நீக்க நடவடிக்கையில் யாருடைய பெயரெல்லாம் இடம்பெறப் போகிறதென ஊழியர்களிடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.
@gettyimages
ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியை இழக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த ஊழியர்கள் பணி நீக்கத்தில் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள் என்ற பட்டியலைத் தலைமை நிர்வாகம், துணைத் தலைவர்களிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2ஆம் கட்ட பணி நீக்கம்
முன்னதாக மெட்டா நிறுவனம் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் அல்லது 11000 பேரைப் பணி நீக்கம் செய்தது. அதன் பின் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்ட பணி நீக்கத்திற்கு மெட்டா ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது மெட்டா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தான் இத்தகைய செலவு குறைப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.