இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய அப்டேட்: மெட்டா நிறுவனர் தகவல்
வாட்ஸ் அப்பில் உள்ள அம்சத்தை இன்ஸ்டாகிராமிலும் கொண்டு வர இருப்பதாக மெட்டா தகவல் தெரிவித்துள்ளது.
புதிய அப்டேட்
மெட்டா நிறுவனம் தங்களுடைய சமூக வலைதள செயலி-யில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள அம்சத்தை இன்ஸ்டாகிராமிலும் கொண்டு வர இருப்பதாக மெட்டா தகவல் தெரிவித்துள்ளது.
getty
இது தொடர்பாக மெட்டா நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள தகவலில், வாட்ஸ் அப்பில் உள்ளதை போன்று Read Recipient-ஐ மறைக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் செயலி-யிலும் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை அவர் பார்த்துவிட்டாலும், குறுஞ்செய்தியை அனுப்பியவர்களுக்கு பெறுநர் பார்த்ததாக(seen) காண்பிக்காது.
இந்த திட்டம் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |