AI ஸ்டிக்கர்களை இனி வாட்ஸ்அப்பில் உருவாக்கலாம்! எப்படி தெரியுமா?
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலிக்கான AI ஸ்டிக்கர்களை Customize செய்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
AI ஸ்டிக்கர்
AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புகுத்தப்பட்டு வருகிறது. இதன் தேவையும் சில இடங்களில் உள்ள நிலையில் பலரும் இதன்மூலம் வேலை எளிதாகிவிட்டதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், மெட்டா நிறுவனம் சமீபத்தில் புதிய AI அம்சங்களை அறிமுகம் செய்தது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மெட்டா இதனை அமைத்துள்ளது.
புதிய AI அம்சங்களில் AI ஸ்டிக்கர்களை Customize செய்துகொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இதனைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்களின் சாட்டிங் அனுபவம் மேம்பட்டதாக இருக்கும் என்று கூறும் மெட்டா, L lama 2 மற்றும் Lmu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு AI tool எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI ஸ்டிக்கர் அம்சமானது ஆங்கில மொழியில் மட்டுமே இயங்கும் வகையில் வாட்ஸ்அப் செயலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் Messenger, Intagram மற்றும் Facebook Story உள்ளிட்டவைகளில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பீட்டா Versionயில் Testing செய்யப்பட்டு வந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எப்படி உருவாக்குவது?
மொபைலில் வாட்ஸ்அப் செயலியை Launch செய்ய வேண்டும். பின் வாட்ஸ்அப் Chat-ஐ இயக்க வேண்டும். செயலில் உள்ள ''More'' எனும் Iconயை Click செய்ய வேண்டும்.
அடுத்து Create மற்றும் Continue Optionகளை Click செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்க நினைக்கும் ஸ்டிக்கருகான விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இனி நான்கு ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். ஒருவேளை உங்களுக்கு தேவை இருந்தால், அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
மேலும், ஸ்டிக்கரில் Click செய்து அதனை மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கலாம். இவற்றை தவிர தேவையற்ற ஸ்டிக்கர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அழுத்தி பிடித்து ''>" Iconஐ Click செய்து ''Report'', பிறகு மீண்டும் ''Report'' ஆப்ஷன்களை Click செய்ய வேண்டும்.
Meta/ composite
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |