உங்கள் whatsapp-ஐ திறக்கும் போது மெட்டா என்ற வார்த்தை வருவதை கவனிச்சீங்களா? புது பிராண்டிங் அமுல்
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அதிகாரபூர்வமாக அமுலுக்கு வந்தது.
அதன்படி, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது.
அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.
அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.
பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.