வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம் - அதிர்ச்சியில் பயனர்கள்
வாட்சப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டு வருகிறது.
மெட்டாவின் கட்டண சந்தா திட்டம்
மெட்டா நிறுவனத்தின் செயலிகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த செயலிகளில் புதிதாக சில அம்சங்களை அறிமுகப்படுத்தி, கட்டண சந்தா(Paid Subscription) முறையை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், தற்போது கிடைக்கும் அடிப்படை வசதிகள் வழக்கம் போல் இலவசமாக கிடைக்கும்.
கட்டண சந்தாவில், இன்ஸ்டாகிராமில் மற்றவர்களின் ஸ்டோரிகளைஅவர்களுக்கு தெரியாத வகையில் பார்க்கும் அம்சம் கொண்டு வரப்பட உள்ளது.
அதேபோல் வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் காட்டப்படும் அம்சத்தை கொண்டு வந்து, விளம்பரமில்லாமல் வாட்சப் பயன்படுத்த சந்தா செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சுமார் 4 யூரோ (ரூ.433) விலையில் இது அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
வைப்ஸ் வீடியோ உருவாக்கம் போன்ற அம்சங்களுக்கான சந்தாக்களை சோதிக்கவும் திட்டமிட்டுள்ளது. வைப்ஸ் வீடியோ உருவாக்கம் தற்போது இலவசமாக உள்ள நிலையில், கூடுதல் வீடியோக்களை உருவாக்க சந்தா செலுத்தும் வகையில் இருக்கும்.

கடந்த ஆண்டில் Manus என்ற AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மெட்டா 2 பில்லியன் டொலருக்கு வாங்கியது. இந்த மனுஸை அதன் சந்தா திட்டங்களில் பயன்படுத்தவும் மெட்டா இலக்கு வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |