4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா மெட்டா?
உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா தங்களது நிறுவனத்தின், 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தொடரும் பணி நீக்கம்
உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தது.
@gettyimages
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தலைமை நிறுவனம் என கூறப்படும், மெட்டா நிறுவனம் சமீப காலங்களாக பணியாளர் குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
இதன்படி, நிறுவனத்தில் அதிக திறன் வாய்ந்த 4000 ஊழியர்களை வேலையிலிருந்து இன்று நீக்குவது என முடிவு செய்துள்ளது.
பொருளாதார சரிவால் சிக்கல்
இதனால், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இதன் தாக்கம் இருக்கும். இதன்பின், புதிய மறுசீரமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் நிர்வாக நடைமுறை பற்றியும் அறிவிப்பு வெளியிடப்படுமென தெரியவந்துள்ளது.
@gettyimages
மேலும் வட அமெரிக்க பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற முடியும் நபர்களுக்கு, அந்த அனுமதியை இன்று முதல் அளிக்கவும் மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தனது 18 வருட வரலாற்றில் இல்லாத வகையில், 6 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பரில் 11000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்(mark zuckerberg) தனது பணியாளர்கள் முன்னிலையில் கூறும்போது,
"எங்களது குழுவின் அளவை குறைப்பது பற்றி நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதனால், 10000 பேர் குழுவிலிருந்து பணி நீக்கம் செய்யப்படலாம்" என கூறியுள்ளார்.