இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சரிபார்க்கப்பட்ட "Blue tick" பெற மாத சந்தா திட்டம்
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சரி பார்க்கப்பட்ட புளூ டிக்(verified Blue tick) உரிமத்தை பெற மாத சந்தா செலுத்த வேண்டும் என மெட்டா(Meta) நிறுவனம் தெரிவித்துள்ளது.
புளூ டிக்கிற்கு சந்தா
ட்விட்டர் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட புளூ டிக் உரிமத்தை பெற சந்தா கட்ட வேண்டுமென்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமாக மெட்டா மாத சந்தா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
@meta
இதன்படி சரி பார்க்கப்பட்ட புளூ டிக் பெற வேண்டுமென்றால் மாதம் $14.99 டொலர் சந்தா கட்ட வேண்டுமென மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புளூ டிக்கின் சிறப்பம்சங்கள்
பேஸ்புக் மட்டும் இன்டாகிராமில் புளூ டிக் பெற்ற கணக்குகளுக்கு என்ன சிறப்பு அம்சங்கள் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
@REUTERS
புளூ டிக்கை சந்தா மூலம் பெறும் கணக்குகள் செயல்திறன் பாதுகாப்பு, நேரடி வாடிக்கையாளர் ஆதரவு, வணிகத்தை விளம்பரப்படுத்துவது மற்றும் பிரத்தியேகமான கூடுதல் அம்சங்களைப் பெறும்.
18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் புளூ டிக் உரிமத்தை பெற முடியாது எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
@meta
ட்விட்டர் புளூ டிக் சந்தாவைப் போலவே, மெட்டாவின் புளூ டிக் சந்தாவுமிருக்கும். மேலும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சரிபார்க்க காத்திருப்பு பட்டியலில் சேர வேண்டும்.
பேஸ்புக் மட்டும் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு புளு டிக் பெற விரும்புவோர் சரிபார்ப்பு ஆவணமாக ஆதார் கார்டு போன்று ஏதேனும் ஒரு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.