பிரித்தானியர்களுக்கு ‘உயிருக்கு ஆபத்து’ : ஆட்டோ புயல் தொடர்பில் வானிலை மையம் எச்சரிக்கை...
பிரித்தானியாவை ஆட்டோ (Storm Otto) என்னும் புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை
பலத்த காற்று காரணமாக பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், சில கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பலத்த காற்று காரணமாக லொறிகள் இரண்டு கவிழ்ந்துள்ளன, மரங்கள் விழுந்து கார்களை சேதப்படுத்தியுள்ளன.
Credit: George Cracknell Wright
இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகளும்
மேலும், இன்று முழுமைக்கும் இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மின்சாரமும், சில இடங்களில் மொபைல் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலை, ரயில் மற்றும் படகுப் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Credit: MET Office
Credit: SWNS
Credit: PA
Credit: SWNS