உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 18 கி.மீ வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.
தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நவம்பர் 18 -ம் திகதி காலை வங்கதேசத்தின் மோங்லா- கேபுபரா இடையே 55 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 19 -ம் திகதி வரை பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |