தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையின் போது திடீரென சரிந்து விழுந்த வானிலை ஆய்வாளர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வானிலை ஆய்வாளர் தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்த பெண்
அமெரிக்காவின் சிபிஎஸ்(CBS) என்ற செய்தி தொலைக்காட்சியில் லாஸ் ஏஞ்சல்ஸின் வானிலை ஆய்வாளர் அலிசா கார்ல்சன் ஸ்வார்ட்ஸ்(Alissa Carlson Schwartz) என்பவர் நேரலையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரைப் பற்றி சிபிஎஸின் நிருபர் அறிமுகப்படுத்திவிட்டு நிகழ்ச்சியை துவங்க தயாரானார்.
@cbs
அப்போது அவரது முகம் வெளுத்தது போல் மாற ஸ்வார்ட்ஸ் திடீரென மேசைக்கு பின் சரிந்து விழுந்தார். காலை ஏழு மணிக்கு வானிலை அறிக்கையை வழங்குவதற்காக வந்திருந்த ஸ்வார்ட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததும் நெறியாளர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தனர்.
?#WATCH: As terrifying moment happened when a CBS LA meteorologist collapsed live on air
— R A W S A L E R T S (@rawsalerts) March 19, 2023
?#LosAngeles | #California
Terrifying moment shows when a CBS LA meteorologist Alissa Carlson Schwartz collapsed on-air on Saturday morning while doing a live report her co workers… https://t.co/zkWpaB81yZ pic.twitter.com/tQ9To9spDo
இந்த நிலையில் உடனே அவருக்கு தொலைக்காட்சி பணியாளர்கள் முதலுதவி செய்தனர். அதற்குப் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நன்றி தெரிவித்த ஆய்வாளர்
அவர் மயங்கி விழுந்த உடனே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறிவிட்டு நெட்வொர்கை துண்டித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வானிலை ஆய்வாளர் ஸ்வார்ட்ஸ் தான் நலமாக இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@instagram
மேலும் நான் நலமாக திரும்பி வரவேண்டும் என எனக்காக வேண்டிய அத்தனை தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
"ஸ்வார்ட்ஸை ஆறுதல் படுத்தவும், 911ஐ அழைக்கவும் உடனடி நடவடிக்கை எடுத்த [ஸ்க்வார்ட்ஸின்] சக ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று CBS லாஸ் ஏஞ்சல்ஸ் துணைத் தலைவரும் செய்தி இயக்குநருமான மைக் டெல்லோ ஸ்ட்ரிட்டோ கூறியுள்ளார்.
“ ஸ்வார்ட்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் மேலும் தெரிந்து கொள்வோம் என்று நம்புகிறோம்.
மேலும் அவர் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
அவர் மயக்கமடைந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் 2014 இல் அவர் வேறொரு நெட்வொர்க்கில் பணிபுரிந்தபோது இதேபோல மயங்கி விழுந்திருக்கிறார்” என TMZ செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.