நினைத்ததெல்லாம் நிறைவேற..குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்யுங்கள்!
குலதெய்வத்துக்கு முக்கியமான குறிக்கும் கிரகங்கள் சூரியன், குரு. இவர்கள் இருவரும் உங்கள் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் மறைமுகமாக குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது என அர்த்தம்.
அதேபோன்று உங்கள் ஜாதகத்தில் 5, 9ம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருந்தார்கள் என்றால், குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இருக்கிறது என அர்த்தம்.
5ம் அதிபதியும், 9ம் அதிபதியும் சேர்ந்து இருந்தால், குலதெய்வத்தை நீங்கள் நினைக்கும்போதெல்லாம் சென்று தரிசனம் செய்யலாம்.
எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் மறந்துவிடலாம். ஆனால், குலதெய்வத்தை மட்டும் மறக்கவே கூடாது என்பார்கள்.உங்கள் வம்சாவளியினரின் வெற்றியை நிர்ணயித்த இடம்தான் குலதெய்வ கோயில்.குலதெய்வம் என்பது முந்தைய தலைமுறையினர் சென்று வழிபட்ட இடம் ஆகும்.
வழிபடும் முறை
ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை வழிபாடும், பெண் தெய்வமாக இருந்தால் பெளர்ணமி வழிபாடு மிகவும் சிறந்தது என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
இறைவன், இறைவி இருவரும் குலதெய்வமாக இருந்தால், அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரு தினங்களும் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.
தேங்காயை உடைத்து, சுத்தமான பசு நெய்யில் விளக்கு ஏற்றுங்கள். பஞ்சுத் திரியில் விளக்கு ஏற்றுங்கள். நீங்கள் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும்.
வருஷத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள். குலதெய்வம் உங்களை காக்கின்ற கடவுள் என்பதால் நிச்சயம் நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு முறையாவது சென்று வழிபாடுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |