மெட்ரோவில் உணவு உண்ட பெங்களூரு பெண்: அபராதம் விதித்த அதிகாரிகள்!வைரல் வீடியோ
பெங்களூரு மெட்ரோவில் உணவு உட்கொண்டதற்காக பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான வைரல் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
₹500 அபராதம்
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், ரயில் பெட்டிக்குள் உணவு உண்டதற்காக ₹500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Beware! Eating inside the Bengaluru metro could cost you , a woman was fined 500 rupees after a co passenger made a video of her eating and uploaded it on social media. The security team intercepted her today and fined her. pic.twitter.com/8NIbfCiytX
— Deepak Bopanna (@dpkBopanna) April 28, 2025
சனிக்கிழமையன்று, மடவரா(Madavara) மெட்ரோ நிலையத்தில் இருந்து மாகடி சாலை மெட்ரோ நிலையம் நோக்கி பயணித்த பெண்மணி ஒருவர், ரயில் இருக்கையில் அமர்ந்து தனது உணவு பெட்டியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், அந்த பெண் மெட்ரோ ரயில் பெட்டியின் இருக்கையில் அமர்ந்து உணவு பெட்டியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.
இந்த விதிமீறல் குறித்து அறிந்ததும், மடவரா ரயில் நிலைய அதிகாரிகள் இன்று காலை அந்த பெண்ணை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட வீடியோ
"ஏப்ரல் 26, 2025 அன்று மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது உணவு உட்கொண்டதன் மூலம் அவர் மெட்ரோ விதியை மீறியுள்ளார்.
இதனை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்
மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திற்குள் உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தை சுத்தமாக பராமரிப்பதையும், குப்பைகள் சேர்வதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் இந்த விதிமுறைகளை மதித்து, மெட்ரோ அமைப்பை சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |