மெட்டி ஒலி நடிகை உமா மகேஷ்வரியின் கடைசி ஆசை இது தான்! நெருங்கிய தோழி உருக்கம்
மெட்டி ஒலி புகழ் உமா மகேஷ்வரியின் கடைசி ஆசை குறித்து அவரது நெருங்கிய தோழி உருக்கமாக பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் 2002ஆம் ஆண்டில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய சீரியல் மெட்டி ஒலி. இந்த சீரியல் மூலம் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் உமா மகேஷ்வரி.
13 ஆண்டுகள் சினிமாவில் இருந்த உமா திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து விலகினார். சென்னை பகுதியில் வசித்து வந்த உமா சில மாதங்களாக மஞ்சள் காமால் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென உயிரிழந்தார். இவரது இழப்பு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது நெருங்கிய தோழியுமான மற்றும் மெட்டி ஒளி சீரியலில் நடித்திருந்த ரேவதி பிரியா உமாவின் மரணத்தை குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், அவருக்கு நீண்ட நாட்களாகவே மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகியது. 2 ஆண்டுகளில் அவரின் உடல் மிகவும் மெலிந்துவிட்டது.
அவருக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும்.. குழந்தை பெத்துக்கணும் என்பது தான் அவரின் ஆசை. அந்த ஆசை கடைசி வரைக்கும் நிறைவேறவில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.