அற்புத மருத்துவ குணங்களை கொண்ட கற்பூரவள்ளி இலை! இத்தனை நோய்களை விரட்டும்
கற்பூரவள்ளி செடி வீட்டிலேயே வளரக்கூடிய ஒரு அற்புத மூலிகை செடி ஆகும்.
இதன் இலை வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
கற்பூரவள்ளி சூப் -
5 கற்பூரவள்ளி இலைகள், 5 - மிளகு, 1 வெற்றிலை கொதிக்க வைத்து அந்த நீரை 60 மில்லி லிட்டர் காலை, மாலை - பருகலாம். குழந்தைகளுக்கு 20-&30 மில்லி லிட்டர் வரை அருந்தி வர நுரையீரல் சளி, ஆஸ்துமா, காசநோய், நாள்பட்ட சளி குணமாகும்.
கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்டக்காய்ச்சி அதில் பாதியளவை நன்கு வடிகட்டி அருந்தி வந்தால் புகைப்பிடிப்பதால் நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுகள், மாசுகள் நீங்கும்.
flipkart
ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
கற்பூரவள்ளி இலைகளை கசக்கி அதன் துளிகளை உள்ளுக்கு அருந்துவதாலும் நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் கற்பூரவள்ளி இலைகளை நன்கு கசக்கி சூடு பறக்க தேய்த்து கொள்வதாலும் ஜுரம் சீக்கிரம் நீங்கும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.
மூக்கடைப்பு
சிலருக்கு சில வகையான உணவுகள் அதிகளவிலும், நேரங்கடந்து சாப்பிடும் போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னையும் உருவாகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் உணர்வும் போகும்.
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும்.
flipkart