அடேங்கப்பா... கற்பூரவல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா?
கற்பூரவல்லி இலை குழந்தைகள் முதுல் பெரியவர்கள் வரை அனைக்கும் நல்ல பயனைக் கொடுக்கக்கூடிய அதிமருந்தாகும். இந்த இலையை எடுத்து வெறுமனே மென்று சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த நன்மையை கொடுக்கும்.
இந்தியர்கள் இந்த கற்பூரவல்லியை சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கற்பூரவல்லி இலைகள் புதினா இலைகளைப் போலவே நறுமணத்தையும் கொடுக்கும். மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சளி வராமல் இருக்க குழந்தைகளுக்கு பிடித்த சூப்பில் கலந்து கொடுக்கலாம்.
இதனால் குழந்தைகள் சளி, இருமல் பிரச்சினைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
சரி கற்பூரவள்ளி இலையில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம் -
தோல் அரிப்புக்கு
நம்முடைய உடலில் தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படும். அப்போது, நாம் இந்த கற்பூரவல்லி இலையை எடுத்து நன்றாக கசக்கி அதன் சாற்றை பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் விட்டு வந்தால் விரைவில் பூரண குணம் பெறலாம்.
காய்ச்சலுக்கு
ஆண்டுதோறும் பருவ நிலை மாறுபாடுகள் காரணமாக பலருக்கு காய்ச்சல் வரும் அப்போது, கற்பூரவல்லி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் தைமோல் மற்றும் கார்வாக்ரோல் காய்ச்சலிலிருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலம்
தினமும் கற்பூரவல்லி இலைகளை சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். இதனால், நோய் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
கொழுப்பு குறைக்க
கற்பூரவள்ளி இலையில் டயட்டரி நார்ச்சத்துகள் அதிகமாக இருக்கிறது. இந்த கற்பூரவல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து சீராக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
ஆஸ்துமாவிற்கு
தினமும் கற்பூரவல்லி இலைகளை சாப்பிட்டு வந்தால் விரைவில் ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம். மேலும், கற்பூரவள்ளி இலைகளை மிதமாக சூடாக்கி மார்பில் தடவி வரலாம். இந்த இலைகளிலிருந்து வரும் நறுமணம் நெஞ்சு நெரிசலை தடுக்க உதவி செய்யும்.
அஜீரணம்
அஜீரண கோளாறு உள்ளவர்கள் தினமும் கற்பூரவல்லி இலை சாற்றினை அருந்தினால், சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து அஜீரண கோளாறுகளை போக்கிவிடும்.