நியூயார்க் பிரூக்ளின் பாலம் மீது மெக்சிகோ கடற்படை கப்பல் மோதல்: 2 பேர் பலி, 19 பேர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான பிரூக்ளின் பழத்தின் மீது மெக்சிகோ கடற்படையின் பயிற்சி கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில், 2 பேர் உயிரிழப்பு, 19 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் மின்சாரம் தடைப்பட்டதால ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cuauhtémoc எனப்படும் இந்த பயிற்சி கப்பல், 1982 -ஆம் ஆண்டு ஸ்பெயினில் கட்டப்பட்டது.
சம்பவத்தின் போது 277 பணியாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இந்த கப்பல், பிரூக்ளின் பக்கம் ஈஸ்ட் ரிவர் வழியாக சென்றபோது, பாலம் மீது மோதியது.
மோதும் தருணத்தில் கப்பலின் மூன்று மாடங்கள் முறிந்தன, மேலும் சில படையினர் கைப்பிடிகள் மற்றும் ஹார்னஸ்கள் மூலம் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், “பாலத்திற்கு பாரிய சேதம் ஏற்படவில்லை” என தெரிவித்தார். ஆனால், கப்பலில் இருந்த 19 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது என்றும், இதில் 4 பேருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.
Brooklyn பாலத்தில் 127 அடி உயரத்தில் இருந்தாலும், Cuauhtémoc கப்பலின் மாடத்தின் உயரம் 160 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் அடுத்த கட்டமாக ஐஸ்லாந்தின் Reykjavik நகரம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
சம்பவத்திற்கு பின் பாலத்தின் அனைத்து வழிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. பின்னர், ஆய்வுக்குப் பின் போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mexican Ship Hits Brooklyn Bridge, Brooklyn Bridge accident 2025, Mexican Navy ship crash, Cuauhtémoc ship collision, NYC ship accident, Brooklyn Bridge damaged, New York maritime crash, Cuauhtémoc NYC tragedy, Brooklyn Bridge today