கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்புக்கு விலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கனடா மற்றும் மெக்சிகோ பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு குறிப்பிட்ட சில வாரங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை அடுத்து, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% வரையிலான வரிவிதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
வரிவிதிப்பிலிருந்து விலக்கு
இந்நிலையில் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புக்கு குறைந்தது நான்கு வாரங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாகன தொழில் முதலாளிகளின் கோரிக்கை தொடர்ந்து கார் தயாரிப்புக்கு எதிரான வரியை தள்ளுபடி செய்து சந்தையை ஆச்சரியப்படுத்திய பிறகு டொனால்ட் டிரம்பின் இந்த வரி விலக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் Truth Social சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி டிரம்ப், வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதிலும், பெண்டானிலை(Fentanyl) தடுப்பதிலும் நாங்கள் தீவிரமாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வரிவிலக்கு அறிவிக்கபட்டு இருந்தாலும் ஏப்ரல் 2ம் திகதி கூடுதல் வரிவிதிப்புகளுக்கான ஆபத்தும் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |