இங்கிலாந்திற்கு கடும் நெருக்கடி கொடுத்த..போட்டியை நடத்தும் மெக்ஸிகோ வெளியேற்றம்
FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது.
ஜூட் பெல்லிங்கம்
மெக்ஸிகோ சிட்டி மைதானத்தில் நடந்த Round of 16 போட்டியில் இங்கிலாந்து - மெக்ஸிகோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 36 மற்றும் 38வது நிமிடங்களில் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம் (Jude Bellingham) கோல்கள் அடித்தார்.
அதற்கு பதிலடியாக 42வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் ஜூலியன் குயினோனெஸ் (Julian Quinones) கோல் அடித்தார்.
54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா (Jarell Quansah) சிவப்பு அட்டை பெற்று வெளியேற, அடுத்த 6 நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்திற்கு கிடைத்தது.

ஹாரி கேன்
நட்சத்திர வீரர் ஹாரி கேன் (Harry Kane) அதனை கோலாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து, 69வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி ராவுல் ஜிமேனெஸ் கோல் ஆக மாற்றினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் போட்டியை நடத்தும் அணிகளில் ஒன்றான மெக்ஸிகோ வெளியேறியது.
இங்கிலாந்து அணி காலியிறுதியில் 12ஆம் திகதி நோர்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |