அதிரடியாக விலை குறைந்துள்ள 5 எலக்ட்ரிக் கார்கள்., 4 லட்சம் வரை குறைந்த MG ZS EV
பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்களுக்குப் பிறகு, எலெக்ட்ரிக் கார்களின் தாக்கமும் சந்தையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஆனால் அதிக விலை காரணமாக மக்கள் மின்சார கார்களை வாங்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஆட்டோ நிறுவனங்களும் விலையை குறைத்து வருகின்றன.
MG Comet EV

MG Motors-ன் மிகச்சிறிய மின்சார காரான Comet EV basic Variant விலை ரூ.99,000 குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த காரின் புதிய விலை ரூ.6.98 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட்டை வாங்க ரூ.8.58 லட்சம் செலவழிக்க வேண்டும்.
MG Comet ZS EV

MG மோட்டார்ஸ் Comet EVயை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் ZS EV மாடலின் மலிவான வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த காரின் விலை ரூ. 22.80 லட்சத்தில் தொடங்கியது. இப்போது புதிய வகையுடன் இந்த காரின் விலை ரூ. 3.82 லட்சம் குறைந்து ரூ. 18.98 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
Tata Tiago

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Tata Tiago எலக்ட்ரிக் காரின் விலை 70 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்புக்குப் பிறகு, டாடாவின் பிரபலமான இந்த எலக்ட்ரிக் கார் இப்போது ரூ. 7.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்பமாகிறது.
Tata Nexon EV

Tiago மட்டுமின்றி, Tata Nexon EV விலையும் ரூ. 1.20 லட்சம் குறைக்கப்பட்டது. விலைக் குறைப்புக்குப் பிறகு நீங்கள் இப்போது இந்த காரின் Long Range Variant ரூ. 16.99 லட்சம் ஆகும்.
இந்த காரின் Basic Model விலை இப்போது ரூ.14.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
Mahindra XUV 400

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சற்று முன் XUV400-வின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய வேரியண்டுடன் இந்த காரின் விலை ரூ.50,000 குறைக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த காரின் புதிய விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சம் வரை உள்ளது.
ஊடக அறிக்கையின்படி, இந்த விலைகள் மே 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Electric Cars Price reduced, Electric Cars in India, MG, Tata, Mahindra Electric Cars, Budget friendly Electric Cars