MG-ன் 3வது எலக்ட்ரிக் கார்-Windsor EV விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
MG Motors நிறுவனத்தின் மூன்றவது எலக்ட்ரிக் காரான MG Windsor EV விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியா, உள்நாட்டு சந்தையில் தனது எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.
ஏற்கனவே இந்திய சந்தையில் விற்கப்பட்ட ZS EV மற்றும் Comet EV ஆகியவற்றின் வெற்றியுடன், மற்றொரு EV காரான Cloud EV ஐ அறிமுகப்படுத்துவதற்கான தருணம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் CUV (crossover-utility vehicle) வகை காரான MG Windsor EV விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
MG ப்ராண்டில் ZS EV மற்றும் Comet EVக்கு பிறகு உள்நாட்டு சந்தையில் நுழையும் மூன்றாவது EV இதுவாகும்.
ஸ்டைலான வடிவமைப்புடன் வரும் Windsor EV, dynamic alloy wheels, slack LED daytime running lights (DRLs), full width light bar, illuminated MG logo and sun roof, two spoke steering wheel, tall stance, coupe style roof, large wheels போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இதன் விலை ரூ.20 லட்சத்திற்குள் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று தெரிகிறது.
Tata Curvv.ev மற்றும் Tata Nexon.ev மற்றும் மஹிந்திரா XUV400 EV கார்களுக்கு கடும் போட்டியாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG மோட்டார் வின்ட்சர் EV இரண்டு பேட்டரி விருப்பங்களில் வருகிறது.
37.9 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட எஞ்சின்-360 கிமீ பயணிக்க முடியும், 50.6 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட எஞ்சின்-460 கிமீ தூரம் பயணிக்க முடியும்.
அனால், இந்திய சந்தையில் ZS EV போன்ற 50.3 kW பேட்டரி பேக் மோட்டார் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 176 ஹெச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்கும்.
மாற்றாக, Windsor EV-ன் global Variant 134 ஹெச்பி மோட்டாருடன் அதிகபட்சமாக 37.9 kW பேட்டரி பேக் உடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
MG Windsor EV. Electric cars in India, MG EV Car