என்னை மன்னிச்சுடுங்க... எம்.ஜி.ஆரிடம் தேம்பி தேம்பி அழுத ஜானகி-என்ன நடந்தது?
‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரிடம் மனைவி ஜானகி தேம்பி தேம்பி அழுத சம்பவம் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் எம்ஜிஆர்
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திர நாயகனாக பெயரும், புகழும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இவரை ‘மக்கள் திலகம்’ என்று மக்கள் அன்போடு இன்றும் அழைத்து வருகின்றனர். சின்ன வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்களாக நாடகங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார். அதன் பின்னர் தான் சினிமாவில் நுழைந்தார்.
எம்ஜிஆரிடம் தேம்பி அழுத ஜானகி
1948ம் ஆண்டு நடிகை ஜானகியை எம்.ஜி.ஆர். திருமணம் செய்தார். கடந்த 1953ம் ஆண்டு எம்ஜிஆரும், ஜானகியும் இணைந்து நடித்து வெளியான படம் தான் ‘நாம்’. அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதனால், வறுமையால் எம்ஜிஆர் கஷ்டப்பட்டார்.
அடுத்தடுத்து நடித்த படங்களும் தோல்வியில் முடிந்தது. இதைப் பார்த்த மனைவி ஜானகி... என்னை திருமணம் செய்ததால்தான் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று தேம்பி, தேம்பி எம்ஜிஆரிடம் கண்ணீர் விட்டு அழுதார்.
இதைப் பார்த்த எம்ஜிஆர்.. அழாதே ஜானகி... இந்த கஷ்டம் எனக்கு புதுசு இல்லை. சின்ன வயதிலிருந்தே நான் கஷ்டப்படுகிறேன். நான் ராசியில்லாதவன். வறுமைக்கு நீ காரணம் அல்ல என்று கூறி ஜானகியை தேற்றினார்.
இருவரும் என்ன செய்யப்போகிறேன் என்ற யோசனையில் இருந்த போது, அடுத்த நாள் ‘ஜெனோவா’ என்ற ஒரு மலையாள படத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்தார். அப்போது, எம்ஜிஆரிடம் முன் பணமாக மிகப் பெரிய தொகையை கொடுத்தார். அப்போது இருவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |