வீடு இல்லாமல் நடுத்தெருவில் கண்கலங்கி நின்ற உதவி இயக்குநர்., உடனே எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா?
வீடு இல்லாமல் நடுத்தெருவில் கண்கலங்கி நின்ற உதவி இயக்குநருக்கு எம்ஜிஆர் செய்த உதவி பற்றி தகவல் வெளியாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர்.. இவரை ‘மக்கள் திலகம்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர். எம்.ஜி.ஆர். என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது அவரது கொடுக்கும் குணம் தான்.
அவரிடம் யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாத அந்த குணம் தான் அவரை புகழின் உச்சத்திற்கு உயர்த்தியது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். குறித்து ஒரு தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எம்ஜிஆர் செய்த பேருதவி
அது என்னவென்றால், கோபால கிருஷ்ணன் என்ற நபர் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார். ஒரு தடவை அவரால் வீட்டு வாடகை பல மாதங்களாக கொடுக்கமுடியவில்லை. இதனால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர் கோபால கிருஷ்ணனின் பொருட்களை வெளியே தூக்கிப் போட்டு வீட்டை பூட்டுப்போட்டு விட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கி கோபால கிருஷ்ணன் நடுத்தெருவில் நின்றார். இதனையடுத்து, தன் நண்பர் வீட்டில் தங்கினார். அப்போது கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டால் செய்வாரா, என்னை அவருக்கு ஞாபகமா இருக்குமா என்று யோசித்தவாறே வாகினி ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு எம்ஜிஆர் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார்.
எம்ஜிஆருக்காக கோபால கிருஷ்ணன் காத்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் எம்ஜிஆர் கோபால்.. நீங்க எப்படி இருக்கிறீங்கன்னு கேட்டார்.. எம்ஜிஆரைப் பார்த்ததும் கோபால கிருஷ்ணனுக்கு கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. உடனே என்ன கோபால்.. என்று எம்ஜிஆர் கேட்க, நடந்ததை அவர் கூறியுள்ளார்.
உடனே எம்ஜிஆர் இதை ஏன் என்னிடம் முதலில் சொல்லவில்லை என்று கேட்டாராம். உடனே, நீங்கள் வீட்டிற்கு போங்கள் என அனுப்பி வைத்தார் எம்ஜிஆர்.பின்னர் உதவியார் மூலம் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பியிருக்கிறார். சில படங்களில் வேலை செய்ய வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். அதன் பின் கோபால கிருஷ்ணன் வாழ்க்கையில் பிரகாசம்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |