9 சிக்ஸர் விளாசி சதமடித்த கொல்கத்தா வீரர்! சூரியகுமார் தலைமையில் திரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
வெங்கடேஷ் ஐயர் அதிரடி சதம்
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது.
ருத்ர தாண்டவம் ஆடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் விளாசினார். ஹிருத்திக் ஷோக்கீன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Nevermind, @IPL helped us out with this ? https://t.co/ZNIgDLuyBU pic.twitter.com/z2sYLSA9TE
— KolkataKnightRiders (@KKRiders) April 16, 2023
மும்பை திரில் வெற்றி
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் ஷர்மா 20 ஓட்டங்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வாணவேடிக்கை காட்டினார்.
அதிரடியில் மிரட்டிய அவர் 25 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 43 ஓட்டங்களும், திலக் வர்மா 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
A Surya Special ?#OneFamily #MIvKKR #ESADay #MumbaiMeriJaan #IPL2023 #TATAIPL @surya_14kumar pic.twitter.com/zlzTkDuSoP
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023
இறுதிக்கட்டத்தில் சரவெடியாய் வெடித்த டிம் டேவிட் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் மும்பை அணி 17.4 ஓவரில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
#ESADay done right! ?#OneFamily #ESADay #MIvKKR #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ril_foundation pic.twitter.com/MYHo7MKdp6
— Mumbai Indians (@mipaltan) April 16, 2023