சூர்யகுமார் இந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடுவாரா? MI ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
சூர்யகுமார் யாதவ்-ற்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் காயம்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ்-விற்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் சூர்யகுமாருக்கு கணுக்கால் காயம் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் உடனடியாக நாடு திரும்பிய சூர்யகுமார் லண்டன் சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
சூர்யகுமார் யாதவ் ஓய்வு
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரிலிருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆரம்பகட்ட போட்டிகள் சிலவற்றில் விளையாட மாட்டார் என தகவல் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சூர்யகுமாருக்கு கணுக்கால் காயம் போக, அவருக்கு ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக ரஷ்யா சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |