நிக்கோலஸ் பூரனின் அதிரடியில்..இமாலய இலக்கினை எட்டிய MI லண்டன்
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் MI லண்டன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்
லண்டன் ஸ்பிரிட் மற்றும் MI லண்டன் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் குவித்தது.
லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (Lhuan-dre Pretorius) 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
பூரன், கர்ரன் விளாசல்
டேவிட் வில்லி 18 பந்துகளில் 31 ஓட்டங்களும், ஜேம்ஸ் கோல்ஸ் 23 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் ஆடிய MI லண்டன் அணி 94 பந்துகளில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்களும், சாம் கர்ரன் 23 பந்துகளில் 33 ஓட்டங்களும், சிக்கந்தர் ரஸா 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |