முதல் பந்திலேயே பூரன் அவுட்: அதிரடி காட்டிய ஜேக்ஸ்..கடைசி பந்தில் த்ரில் வெற்றி
The Hundred போட்டியில் MI லண்டன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.
சௌதர்ன் பிரேவ் 129 ஓட்டங்கள்
தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் MI லண்டன் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
Elite in the field as usual, Nathan Sowter! 👏#MILondon 💙💚 pic.twitter.com/89kOlugSTB
— MI London (@MILondonCricket) July 27, 2026
முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 49 ஓட்டங்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ஓட்டங்களும் விளாசினர்.
ட்ரெண்ட் போல்ட், டாம் கர்ரன், ரிச்சர்ட் க்ளீஸன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய MI லண்டன் அணியில் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் ஜேம்ஸ் வின்ஸ், நிக்கோலஸ் பூரன் டக்அவுட் ஆகினர்.
அடுத்து வந்த சாம் கர்ரன், வில் ஜேக்ஸுடன் கைகோர்த்து ஓட்டங்கள் சேர்த்தார். அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் அரைசதம் அடிக்க, சாம் கர்ரன் 30 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
வில் ஜேக்ஸ் அதிரடி
பின்னர் வில் ஜேக்ஸ் (Will Jacks) 41 பந்துகளில் 54 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஷெர்பானே ரூதர்போர்ட் 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
டாம் கர்ரன் 7 ஓட்டங்களிலும், ரஷித் கான் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஓலி போப் இலக்கினை எட்டி வெற்றி பெற வைத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
A big W on the road! 🏆#MILondon 💙💚 pic.twitter.com/cudhN5HlEY
— MI London (@MILondonCricket) July 27, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |