ஐபிஎல் ஏலத்திற்கு நோ சொன்ன அம்பானியின் மனைவி: இதுமட்டுமே காரணமா?
ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 4ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் 12 மற்றும் 13 திகதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மும்பை அணியின் வீரர்கள் தேர்வு குழுவில் இருந்து நீத்தா அம்பானி விலகியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளில் மிக முக்கியமான மட்டும் வலுவான அணியாக மும்பை இந்தியன் அணி எப்போதுமே திகழ்கிறது.
அதற்கு அந்த அணியின் வீரர்கள் தேர்ந்தேடும் முறையே காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அனுபவ வீரர்களின் தேர்வு ஒரு புறம் இருக்க, மறுபுறம் இளம் இந்திய வீரர்களையும் குறிபார்த்து மும்பை இந்தியன் அணி தன்னுடன் இணைத்து கொள்ளும் உதாரணமாக ஹர்திக் பாண்டியா, இஷான் கிசான், அம்பத்தி ராயுடு, பும்ரா போன்றோர். இதுபோன்ற காரணங்களே மும்பை அணி ஒரு வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.
இப்படி இருக்கையில் எப்போதும் மும்பை அணியின் ஏலம் எடுக்கும் குழுவில் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி, மற்றும் அவரது மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் இடம் பிடிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஏல நடைமுறைகளில் பங்கேற்கும் ஒவ்வாரு அணி நிர்வாகிகளும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மற்றும் மூன்று நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்டுகளால் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்தில் நீத்தா அம்பானி பங்கேற்கவில்லை என தெரிகிறது.
மேலும் இந்த ஆண்டிற்கான ஏலம் நடைமுறைகள் அனைத்தையும் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியே கவனிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகாஷ் அம்பானிக்கு பக்க பலமாக பயிற்சியாளர் ஜெயவர்தனே, முன்னாள் கிரிக்கெட் வீரர் வினய் குமார் ஆகியோர் செயல்படவுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஐ.பி.எல் ஏலத்திற்கு இன்னும் ஒருவரா காலமே இருக்கும் நிலையில் அனைத்து அணி வீரர்களும் பெங்களூருவிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
மேலும் வந்து சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் பாதுகாப்பு குமிழ்க்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு குமிழ்க்குள் இருக்கும் வீரர்களுக்கு யோகா வகுப்பு, சிறிய அளவிலான இசை நிகழ்ச்சி, வீடியோ கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேசன் என அனைத்து வசதிகளையும் BCCI நிர்வாகம் செய்து தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.