ஹார்திக் பாண்டியாவை வாங்க துடிக்கும் CSK: பிரெவிஸ், துபே-க்கு ஓகே சொன்ன சென்னை
ஹர்திக் பாண்டியாவின் அணி மாற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஹார்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டும் CSK
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பேஸ்டமேனான ஹார்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை அணியில் இணைத்து கொள்ள பல அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மும்பை அணியிடம் இருந்து ஹார்திக் பாண்டியாவை எப்படியாவது தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக முயன்று வருகிறது.
மேலும் இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
மும்பை அணியின் எதிர்பார்ப்பு
ஹார்திக் பாண்டியாவை விடுவிக்க சென்னை அணியில் இருந்து ஷிபம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரேவை மும்பை அணி எதிர்பார்க்கிறது.
ஆனால் சென்னை அணியின் நீண்ட கால முதலீடாகவும் மற்றும் தங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் ஆயுஷ் மாத்ரேவை மும்பை அணிக்கு வழங்க சென்னை அணி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

சென்னை அணியின் விருப்பம்
ஆனால் ஹார்திக் பாண்டியாவிற்கு மாற்றாக ஷிபம் துபே, தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரூ.10 கோடி வரை பணம் பரிமாறிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

மும்பை அணி மற்றும் சென்னை அணி இடையே ஹார்திக் பாண்டியாவை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதனை மற்ற பிற அணிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |