விக்கெட் கீப்பரால் நோ பால் - ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை
2025 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில், நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.
மும்பை வெற்றி
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.
163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பில், 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டம் ஆடும் போது, 7வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ஜீசன் அன்சாரி வீசினார்.
அதை எதிர்கொண்ட மும்பை வீரர் ரிக்கெல்டன், அந்த பந்தை தூக்கி அடிக்க அதனை பேட் கம்மின்ஸ் கேட்ச் செய்ததும், ரிக்கெல்டன் வெளியேறுவார்.
விக்கெட் கீப்பரால் நோ பால்
ஆனால் இந்த பந்துநோ பால் என்பதால், ரிக்கெல்டனை நடுவர் மீண்டும் துடுப்பாட்டம் ஆட அழைப்பார்.
கிரிக்கெட் விதிப்படி துடுப்பாட்டக்காரர் பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து பேட்டில் படும் வரை பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பரின் கைகள் ஸ்டம்பிற்கு முன்னால் வரக்கூடாது.
ஆனால் இந்த பந்தில், விக்கெட் கீப்பர் கிளாசான், ரிக்கெல்டன் பந்தை அடிக்கும் முன்னரே, கைகள் ஸ்டம்பிற்கு முன்னால் வைத்திருப்பார். இதனை கவனித்த நடுவர் அந்த நோ பால் ஆக அறிவிப்பார்.
ஐபிஎல்லில் முதல்முறையாக விக்கெட் கீப்பர் கையை முன்னால் கொண்டு வந்ததால், பந்து நோ பால் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |