ராஜஸ்தானை ஊதித்தள்ளிய மும்பை! மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய டி காக்-பொல்லார்ட்
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன் படி முதல் ஆட்டத்தில், மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அதன் படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான பட்லர் 32 பந்தில் 41 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 20 பந்தில் 32 ஓட்டங்களும் குவித்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 9.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 91 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதே ரன் விகிதத்தில் சென்றால், எப்படியும் ராஜஸ்தான் அணி 200 ஓட்டங்களை குவிக்கும், ஒரு இமாலய இலக்கை மும்பை அணி விரட்ட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
For his sublime 42 (27), @IamSanjuSamson is our @expo2020dubai Royal of the Match. ? #HallaBol | #MIvRR | #IPL2021 pic.twitter.com/ZBPIaDDDcb
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் திணறிய சாம்சன் 27 பந்தில் 42 ஓட்டங்களும், ஷிவம் துபே 31 பந்தில் 35 ஓட்டங்களும் அடிக்க, ராஜஸ்தான் அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் வெறும் 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 14 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 16 ஓட்டங்களிலும் வெளியேற, டி காக்குடன் ஜோடி சேர்ந்த க்ருணல் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
A valiant knock and an important partnership in the middle! ?
— Mumbai Indians (@mipaltan) April 29, 2021
Well played, Krunal ? https://t.co/6NV0gROa8T
இதனால் மும்பை அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது, க்ருணல் பாண்ட்யா 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், கடைசி கட்டத்தில் வந்த பொல்லார்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி மும்பை அணியை வெற்றி பெற வைத்தார்.
குறிப்பாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த துவக்க வீரர் குயிண்டன் டி காக் 50 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார். பொல்லார்ட் 8 பந்தில் 16 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
H?PPY faces after we kick-off our Delhi leg with a victory ???#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #MIvRRpic.twitter.com/dKtScDcaFS
— Mumbai Indians (@mipaltan) April 29, 2021