பொல்லார்டு ருத்ர தாண்டவம்... சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி

IPL Kieron Pollard Mumbai Indians Chennai Super Kings
By Arbin May 01, 2021 06:39 PM GMT
Report

கடினமான இலக்கை பொல்லார்டு தனியொருவனாக அடித்து நொறுக்க, கடைசி பந்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ பிளெசிசுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

பொல்லார்டு ருத்ர தாண்டவம்... சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி | Mi Won By 4 Wickets Against Csk

டூ பிளெசிஸ் 50 ஓட்டங்களும், மொயீன் அலி 58 ஓட்டங்களும் குவித்தனர். ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு அதிரடியில் மிரட்டினார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா கம்பெனி கொடுக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்த ஜோடியை மும்பை பந்துவீச்சாளர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்கள் குவித்தது.

பொல்லார்டு ருத்ர தாண்டவம்... சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி | Mi Won By 4 Wickets Against Csk

20 பந்துகளில் விரைவாக அரை சதம் கடந்த அம்பதி ராயுடு, மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். ஜடேஜா 22 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 219 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 35 ஓட்டங்களிலும், டி காக் 38 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.

பொல்லார்டு ருத்ர தாண்டவம்... சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி | Mi Won By 4 Wickets Against Csk

அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யாவுடன், பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். பொல்லார்டு ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் 17 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

இந்த ஜோடி 49 பந்தில் 89 ஓட்டங்கள் சேர்த்தது. 17வது ஓவரில் குருணால் பாண்ட்யா 32 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

பொல்லார்டு ருத்ர தாண்டவம்... சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி | Mi Won By 4 Wickets Against Csk

மும்பை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவரில் 31 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் சாம் கர்ரன் 15 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் மும்பை வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 219 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பொல்லார்டு 34 பந்துகளில் 87 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது மும்பை அணி பெற்ற 4வது வெற்றி ஆகும். சென்னை சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US