இந்த பெண்ணைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்... பிரித்தானிய நாடாளுமன்றத்தை குலுங்கவைத்த உளவுத்துறையின் எச்சரிக்கை

By Balamanuvelan Jan 14, 2022 03:59 AM GMT
Report

சீனப்பெண் ஒருவரைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய உளவுத்துறை அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய நன்கொடையாளரான சீனப் பெண் ஒருவர், சீன உளவாளி என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று நாடாளுமன்றமே அதிர்ந்துள்ளது.

Christine Lee (58) என்ற சீனப்பெண், பல்வேறு பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் நிற்கும் புகைப்படங்களை சர்வசாதாரணமாக காணலாம்.

சீன பிரித்தானிய உறவை வலுப்படுத்துவதற்காக என்று கூறி, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Christine Lee, லண்டன் அலுவலகம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.

இந்த பெண்ணைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்... பிரித்தானிய நாடாளுமன்றத்தை குலுங்கவைத்த உளவுத்துறையின் எச்சரிக்கை | Mi5 Issues Urgent Warning About Chinese Lawyer

லண்டனிலுள்ள சீன தூதரகத்தின் சட்ட ஆலோசகராகவும் கடல்கடந்த சீன விவகாரங்கள் அலுவலகத்தின் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமரான தெரஸா மே Christine Leeயின் ’சேவையை’ பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

டோனி பிளேர் பிரித்தானிய பிரதமராக இருக்கும்போதே Lee பிரித்தானிய அரசியலில் தலையை நுழைத்திருக்கிறார்.

லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Barry Gardinerஉடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், 500,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக Gardinerக்கு நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.

இப்படி மெதுவாக அரசியலுக்குள் நுழைந்து பிரபலமான Christine Lee குறித்து தற்போது ஒரு பயங்கர செய்தியை பிரித்தானிய உள்நாட்டு உளவு ஏஜன்சியான MI5 பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.


அந்த செய்தியில், சீன அரசின் உளவாளியான ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பணியாற்றி வருகிறார்.

அவர் நமது செயல்பாடுகளைக் குலைப்பதற்காக இரகசியமாக செயல்பட்டு வருகிறார், ஆகவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிப்படையாக ஒருவர் பிரித்தானிய அரசியலில் ஈடுபட்டுள்ள ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்துள்ள விடயம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை செயலரான பிரீத்தி பட்டேலும், வெளிநாட்டு ஊடுருவலை அடையாளம் காண பிரித்தானியா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Christine Lee கைது செய்யப்படவோ, நாட்டிலிருந்து வெளியேற்றப்படவோ இல்லை, ஆனால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை மெமோ ஒன்று மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வீமன்காமம், கொடிகாமம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US