7 சிக்ஸர், சரிந்த அணியை முதல் சதம் விளாசி மீட்ட வீரர்! மிரண்டுபோன எதிரணி
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், மைக்கேல் பிரேஸ்வெல் சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்லினில் நேற்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், நடுவரிசை வீரர்களின் அபார ஆட்டத்தினால், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 113 ஓட்டங்கள் விளாசினார். நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், டிக்னர் மற்றும் சோதி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அரைசதம் அடித்த கப்தில் 51 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் என்ற நிலையில் தடுமாறியது. துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர். அப்போது தனது 4வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவரது ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய பிரேஸ்வெல் தனது முதல் சர்வதேச சதத்தினை பதிவு செய்தார்.
PC: Twitter (@BLACKCAPS)
அதன் பின்னரும் அவர் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதிவரை களத்தில் நின்ற பிரேஸ்வெல் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
ஒரு பந்து மீதமிருக்க ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. மைக்கேல் பிரேஸ்வெல் 82 பந்துகளில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 127 ஓட்டங்கள் குவித்தார். அயர்லாந்து தரப்பில் கேம்பர் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
PC: Twitter (@BLACKCAPS)