கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்பனையான மைக்கேல் ஜாக்சனின் தொப்பி! விலை எவ்வளவு தெரியுமா?
மறைந்த உலக புகழ்பெற்ற பாப் இசை, நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் தொப்பி, தற்போது வேறொருவருக்கு சொந்தமானது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பாரிஸில் நடந்த ஏலத்தில் மைக்கேல் ஜாக்சனின் தொப்பி முதல் முறையாக விற்கப்பட்டது. இந்த தொப்பி மைக்கேல் ஜாக்சன் தனது பிரத்தியேகமான மூன்வாக் நடனம் ஆடுவதற்கு சற்று முன்பு அணிந்திருந்த தொப்பியாகும்.
அவரது ஸ்டைலான அந்த கருப்பு தொப்பி 77,640 யூரோக்கள் அதாவது இலங்கை பணமதிப்பில் சுமார் 2 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏல நிறுவனம் இந்த தொப்பிக்கு 60,000 யூரோ முதல் 100,000 யூரோ வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் விடப்பட்ட 200 பொருட்களில் மைக்கேல் ஜாக்சனின் தொப்பி மிகவும் கவனத்தை ஈர்த்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Michael Jackson's moonwalk hat, Michael Jackson hat auction, Music memorabilia