மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய காலுறை ஏலம் போன விலை: எத்தனை லட்சம் தெரியுமா?
மைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன், இசையுலகின் ஜாம்பவான், தி கிங் ஆப் பாப் என அழைக்கப்படுவார்.
மைக்கேல் ஜாக்சன் என்றாலே அவரது மூன் வாக் மற்றும் நடன அசைவுகள் தான் முதலில் நினைவுக்கு வரும்.
தனது நடனத்தால் புது போக்கை உருவாக்கிய இவரை 1982 ஆம் ஆண்டு வெளியான ஆல்பமான த்ரில்லர் உச்சத்திற்கு உயர்த்தியது.
இதனைத்தொடர்ந்து 1991ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் பிளாக் ஆர் வைட் ஆல்பம் ஒன்றை உருவாக்கினார்.
இதற்கிடையே, 1997ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய காலுறை பல லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள நிம்ஸ் என்ற இடத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய காலுறை ஒப்பனை அறையில் கிடந்தபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டது.
அந்த காலுறை தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில், அவரது ரசிகர் ஒருவர் அதனை 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை, சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதேபோன்று, அவர் அணிந்திருந்த தொப்பி, கடந்த 2023ஆம் ஆண்டு சுமார் 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |