40 பந்தில் 81 ரன்! வாணவேடிக்கை காட்டிய வீரர்
அமெரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டி sportpark மைதானத்தில் நடந்து வருகிறது.
அமெரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, நெதர்லாந்தின் மேக்ஸ், மைக்கேல் லெவிட் தொடக்கம் கண்டனர்.
மேக்ஸ் 13 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசி வெளியேற, விக்ரம்ஜித் டக்அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் மைக்கேல் லெவிட் (Michael Levitt) மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸ் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
லெவிட் 34 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க, எட்வர்ட்ஸ் 40 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் குவித்தது. அமெரிக்கா தரப்பில் வான் ஸ்கால்விக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |